India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குற்றால அருவிகள், தென்காசியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகள் ஆகும். அதில் முக்கிய அருவியாக மெயின் அருவி உள்ளது. இவ்வருவியில் பருவ காலங்களில் தண்ணீர் அர்ப்பரித்து கொட்டும். இப்பகுதியிலேயே சங்கு வடிவில் உள்ள குற்றாலநாதர் கோவில், மற்றும் பல சிவன் கோவில்கள் உள்ளன. இந்த மூலிகை மலையிலிருந்து வரும் அருவில் குளிப்பதால் நோய்கள் விலகும் என்ற நம்பிக்கை இன்றவும் நம்பப்படுகிறது.
கடையம் ராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்து (47) என்பவர் இரவணசமுத்திரம் இரயில்வே கேட் மேல்புறம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஹெட் லைட் வேலை செய்யாமல் இருந்த இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி வந்து மோதியதில் முத்து
சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடி பலியானார். பலியானவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் காயம்.
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான புளியரையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரியை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது லாரிக்குள் கோழிக்குஞ்சுகளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த லாரி கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் மேலநீலத நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், இவரது மனைவி கஸ்தூரி. 7 மாத கர்பிணி என்பதால் ஊருக்கு சென்று வளைகாப்பு நடத்துவதற்காக சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் ரயிலில் நேற்று இரவு வந்துகொண்டிருந்தார். அப்போது வாந்தி வந்ததால் படிகட்டில் நின்று வாந்தி எடுத்த போது தவறி கீழே விழுந்து பலியானார். கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் இன்று ராஜாங்கபுரம் கிளை அதிமுக பொதுமக்களுக்கு நீர் மற்றும் நீர்சத்து பழங்கள் வழங்கப்பட்டன.அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் ராசு ஒன்றிய செயலாளர் கணேசன், லட்சுமி பாண்டியன், நடராஜன், மைதீன், நாலாயிரம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை இந்த மாதம் தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களை பராமரிக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக இன்று கோடைகால பயிற்ச்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வை அப்துல்நசிர் சொற்பொழிவாற்றி துவக்கி வைத்தார். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி நகராட்சியில் இன்று மமக 21வது கிளையின் சார்பாக நகராட்சி கவுன்சிலர் அபுபக்கர் தலைமையில் நகராட்சி சேர்மன் சாதிரை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, சொர்ணாபுரம் ரோடு மாட்டு அருப்பு நிலையம் கீழ்புறம் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.
தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர் மே1ல் வெளியிட்ட அறிக்கை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நீா்வள ஆதார அமைப்புகளில் குடிநீா் இருப்பு மிக குறைவாக உள்ளது. மேலும், பருவமழையும் சரியாக பெய்யாததால் நகராட்சியிலுள்ள வாா்டுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீரையும் தற்போது சீராக வழங்க இயலவில்லை.
எனவே, தென்காசி நகர பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்
Sorry, no posts matched your criteria.