Tenkasi

News May 7, 2024

தென்காசியில் 2 நாள் மழை…!

image

தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

News May 7, 2024

தென்காசி: மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டு

image

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் திருநங்கை நிவேதா ஆகியோரை தமிழக முதலமைச்சர் இன்று நேரில் அழைத்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

News May 7, 2024

தென்காசி அருகே கொய்யாப்பழம் சீசன் அபாரம்

image

செங்கோட்டை வட்டாரங்களில் உள்ள பழ தோட்டங்களில் கொய்யாப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் இவை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சில்லரை வியாபாரிகள் கொள்முதல் செய்து சாலை ஓரங்களில் விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ கொய்யா 70 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

News May 6, 2024

தென்காசி: இலவச கண் பரிசோதனை முகாம் 

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் இன்று நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை கடையம் அப்பல்லோ பார்மசி,
ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முகாம் நடந்தது. முகாமை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முகம்மது நெய்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 6, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம்..!

image

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பத்ரி நாராயணன் 592 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளனர்.

News May 6, 2024

தென்காசி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தென்காசி மாவட்டத்தில் 96.07தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.25 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 97.52 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

தென்காசி அருகே திருட்டு; அதிர்ச்சி

image

கடையம் அருகிலுள்ள,முதலியார்பட்டி மெயின்ரோட்டில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.அதே ரோட்டில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார்.இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் கல்லாவில் பணம் செல்போன் பல பொருட்கள் திருட்டுப் போய் உள்ளனர்.கடையம் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News May 5, 2024

தென்காசியில் வெளுக்கும் மழை

image

தமிழகத்தில் மே 7, 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 8-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 5, 2024

தென்காசி:இரவிலும் குளிர்பான விற்பனை அமோகம்

image

ஆலங்குளம் வட்டாரத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரங்களில் பதநீர், நுங்கு, இளநீர், கரும்பு சாறு ஐஸ் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இரவிலும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் குளிர்பானம் பருக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இரவிலும் இதன் விற்பனை களை கட்டியுள்ளது.

error: Content is protected !!