India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திமுக ராஜேந்திரன் இன்று நெற்கட்டும் செவலில் வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் இடம் இதுகுறித்து தெரிவிக்கவே அமைச்சர் பழையபடி தொடரும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு செப்.3ஆம் தேதி அன்று குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வருகிற 10ஆம் தேதி தென்காசி மின் கோட்ட அலுவலகத்திலும், 17ஆம் தேதி கடையநல்லூர் மின்கோட்டை அலுவலகத்திலும், 24ஆம் தேதி சங்கரன்கோவில் மின் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும். மின் நுகர்வோர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் நாளை நடைபெற உள்ள, சுதந்திரப்போராட்ட வீரர் புலித்தேவன் 309 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பூலித்தேவன் சிலை அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று (ஆகஸ்ட் 31) இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “Playstore-இல் Grindr என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் பிற நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டியராசா, இன்று தென்காசி மாவட்ட ரயில் சம்பந்தமான கோரிக்கைகளை இன்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவை நேரில் சந்தித்து மனுவாக வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். உடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் சிலைக்கு நாளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 15 பேர், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், எம்எல்ஏ ராஜா, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், முன்னாள் ஐஜி விஜயகுமார். கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி ஆகியோர் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,30) வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். களிமண் & சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் மட்டும் விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கொண்டுமட்டுமே சிலை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை(செப்.,1) நடுவக்குறிச்சி, சேந்தமடத்தில் தலா 2 கடைகளும் திருவேங்கடம் சாலை, சுரண்டை சாலை, ராஜபாளையம் சாலை, பாம்பு கோயில் சந்தை சாலை, அச்சம்பட்டி, கடையநல்லூர், கரிவலம், அத்திப்பட்டி கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22 டாஸ்மாக் கடைகள், 4 பார்கள் மூடப்படுவதாக ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், செப்.,1 ஆம் தேதி நடைபெறவுள்ள நெற்கட்டான்செவல் பூலித்தேவர் ஜெயந்தி விழாவிற்கு தென்காசி MP டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு பூலித்தேவன் மக்கள் கழகம் சார்பில் நேற்று(ஆக.,30) அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து விழா குறித்து ஆலோசனையும் நடைபெற்றது. உடன் மேலநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவ் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.