Tenkasi

News September 3, 2024

 லாட்டரி சீட்டு வாங்கி வந்தவர் கைது

image

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொட்டல்புதூரை சேர்ந்த மைதீன் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனைக்காக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வாங்கி வந்த போது புளியரை வாகன சோதனையில் அவரிடமிருந்து ரூ.79000 மதிப்பிலான 1700 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து புளியரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 3, 2024

காட்டுப்பன்றியை கட்டுபடுத்த கோரி மனு

image

அதிசயபுரம் பரம்பு மலை பகுதியில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்களில் பயிரிடப்படும் வேளாண் பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த கோரி நேற்று(செப்.2) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் கோரிக்கை மனு வழங்கினார்.

News September 2, 2024

எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து செப்.11 அன்று பரமக்குடி செல்வோர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமை வகித்து அஞ்சலி செலுத்த செல்வோர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள், வாகனங்களுக்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.

News September 2, 2024

இலவச குரூப் தேர்வு பயிற்சிக்கு அழைப்பு

image

செங்கோட்டை நூலகத்தில் இறுதி வார இலவச குரூப் மாதிரி தேர்வு வருகிற செப்டம்பர் 4 மற்றும் 6,8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த இறுதி வார இலவச மாதிரி தேர்வில் முன்பதிவு தேவையில்லை. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94869 84369 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என நூலகர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 2, 2024

தென்காசி வந்து திரும்பிய இளைஞர்கள் விபத்தில் பலி

image

ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன்(25), அவரது நண்பர் மாரிமுத்து(28) இருவரும் நேற்று(செப்.,1) தென்காசியில் நடைபெற்ற பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில், எதிரே வந்த வேன் மோதி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 2, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று(செப்.,2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 1, 2024

கீழப்பாவூரில் கல்வி கடன் முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை மறுநாள்(செப்.3) அன்று கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் இன்று தெரிவித்துள்ளார் .

News September 1, 2024

தென்காசியில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்டம்பர் 1) அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 1, 2024

“பழைய குற்றாலம் வனத்துறையிடம் இல்லை”

image

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திமுக ராஜேந்திரன் இன்று நெற்கட்டும் செவலில் வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் இடம் இதுகுறித்து தெரிவிக்கவே அமைச்சர் பழையபடி தொடரும் என தெரிவித்தார்.

News September 1, 2024

செப்.3ல் மதிப்பீட்டு குழு தென்காசி வருகை

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு செப்.3ஆம் தேதி அன்று குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!