India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகிரியில் 12 சென்டி மீட்டரும், தென்காசி நகரில் 2 சென்டி மீட்டரும், கடனா அணை ஆயிக்குடி, தென்காசி aws ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளது. தென்காசியில் இன்னும் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு 12ம் தேதி ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டு வாஷிங் மிஷின் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இ.சீலா, பர்சார் என். சரவணன் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியர் லதா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தென்காசி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பல இடங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீண்ட இடைவேளைக்கு பின் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள் இன்று அதி காலையிலேயே குற்றாலம் அருவிகளுக்கு படையெடுத்தனர். அவர்கள் மெயின் அருவியில் நீண்ட நேரம் நீராடி கோடை வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு12′ ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தென்காசி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பாட்டாளர்கள் கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டு தேர்வு எழுதிய பின் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களிடம் வழங்கப்பட்டது. 150 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து ஐந்து மாணவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
ஆலங்குளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் இயங்கும் முறைகள் குறித்து ஆய்வு பணி இன்று நடைபெற்றது. இதில் 23 பள்ளிகளில் உள்ள 58 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவல்லி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 41 வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன மற்ற வாகனங்களின் குறைகளை இந்த மாத இறுதிக்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலை முத்து(23) என்ற இளைஞர் கையில் ஆயுதங்கள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றியது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் இன்று தேவர்குளம் காவல் நிலைய விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தினர் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.இந்த ஆலோசனை கூட்டம் நடத்த தடை விதித்து சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார் .
தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.