India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்க ‘நம்ப ஸ்கூல் நம்ப ஊரு பள்ளி’திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தி உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பொருளாகவோ, பணமாகவோ, களப்பணிகள் மூலமாக பங்களிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் 63853 13047 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் வீரகேரளம்புதூர் ஆகிய பகுதிகளில் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இங்கு 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக செப். 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். SHARE IT

விநாயகர் சதுர்த்தி நாளை(செப்.7) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு தென்காசி மாவட்டத்தில் 295 இடங்களில் 295 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தரநிர்ணய அமைவனம் மூலம் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்விற்கு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிலச்சரிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

செங்கோட்டையில் இருந்து புளியரை செல்லும் சாலையில் இன்று மாலை பூலாங்குடியிருப்பை சேர்ந்த நவாஸ் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டாட்டா ஏஸ் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நவாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆழ்வார்குறிச்சி அருகே கருத்த பிள்ளையூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வு எழுதி பள்ளியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேலாம்பூரை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் வின்சென்ட். இவர் கடையத்தை தனி தாலுகாவாக அமைக்க கோரி கடந்த மாதம் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவிற்கு இன்று(செப்.,5) பதில் வந்துள்ள கடிதத்தில் கடையத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக கூடுதல் உதவியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திமுக பொது உறுப்பினர் கூட்டம் வாசுதேவநல்லூரில் நேற்று(செப்.,4) நடைபெற்றது. அவைத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா MLA, ராணி ஸ்ரீகுமார் MP ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தொடர்ந்து MLA ராஜா பேசுகையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றார்.

சுரண்டை நகராட்சி வள மீட்பு பூங்காவில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் ஆணையாளர் ராம் திலகம் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தலுடன் சுரண்டை நகராட்சி பொருட்கள் மீட்பு அறையில் இருந்து 6.7 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் 1.8 டன் பேப்பர் கழிவுகள் மறுசுழற்சிக்காக தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடையம் அருகே புங்கம்பட்டி ஸ்ரீ ராம நாராயண நாடார் நடுநிலைப் பள்ளியில் கடையம் வட்டாரம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம் இன்று(செப்.5) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனி குமார் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.