India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்தது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவிக்கு தற்போது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது .இதில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர் .நீண்ட நாட்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 18 மற்றும் 19ஆம் தேதி “ஆரஞ்ச் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று (மே 15) விடுத்துள்ள செய்தி குறிப்பு;தென்காசி மாவட்டத்தில் 15, 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழையும், 16, 17 ஆம் தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆறு மற்றும் குளங்களில் நீர் அதிகம் வர வாய்ப்புள்ளதால் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்பான இருக்க வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை துறை மூலம் அனைவரது தொலைபேசிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
தென்காசி மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே மே மூன்றாவது வார இறுதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 18, மற்றும் 19ஆம் தேதி தென்காசி மாவட்டம் முழுவதும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக ஏற்கனவே சிவகிரி வட்டாரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் யானை பாலத்தில் சிற்றாறு செல்கிறது. பாலத்தில் இன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
குமரிக் கடல் பகுதி அருகே வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்காசி,தேனி ,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதால் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் நேற்று முதல் அந்த பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.