Tenkasi

News October 11, 2024

தொழில் கடன்கள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(அக்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குழு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும் இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 89392-73253 என்ற எண்ணில் அல்லது குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News October 11, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தென்காசி உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 11, 2024

ஆலங்குளம் அருகே குவாரியை மூட வேண்டும்: பிரேமலதா

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று(அக்.,10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டியில் 3 ஆண்டுகளாக கிரசர் மற்றும் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக வெடி வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

கடையநல்லூர் ஸ்டேசனில் மரக்கன்று நட்டுவைத்த SP

image

தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேற்று(அக்.,10) இரவில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

News October 11, 2024

வீதி வீதியாக நன்றி தெரிவித்த தென்காசி MP

image

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று(அக்.,10) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வீதி வீதியாக சென்று வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத் தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை(ஆக.11) தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்கள், நாளை மறுநாள்(ஆக.12) தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

முதியவர் கொலையில் 10 பேர் சிறையில் அடைப்பு

image

சங்கரன்கோவில் அருகே சமுத்திரபாண்டி(70) என்பவரின் இறுதிச் சடங்கின்போது உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் வேலுச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 22 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.

News October 10, 2024

பண்பொழி கோயிலில் சுமங்கலி பூஜை

image

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி நகரீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக நாளை(அக்.,11) பதினோராம் தேதி சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனையொட்டி நாளை கும்ப பூஜை மகா அபிஷேகம், 108 சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. 108 பெண்கள் கோயிலில் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டது. SHARE IT.

News October 10, 2024

தென்காசி ரேசன் கடைகளில் வேலை! APPLY பண்ணுங்க

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>‘CLICK’<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News October 10, 2024

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 180020211989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.