Tenkasi

News March 22, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

இன்று மார்ச் 22 காலை 7 மணி நிலவரப்படி தென்காசி மாவட்டம் கடனா அணை நீர் இருப்பு 61 அடியாக உள்ளது. அணைக்கு 9 கன அடி நீர் வருகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 51 அடியாக உள்ளது. 10 கன அடி வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை நீர் இருப்பு 27 அடி. குண்டாறு அணை நீர் இருப்பு 26 அடி. அடவி நைனார் அணை நீர் இருப்பு 38 அடி .இந்த அணைக்கு 27 கன அடி நீர் வருகிறது, 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

News March 22, 2025

புளியங்குடி அந்தோணிசாமிக்கு ‘வேளாண் வேந்தர்’ விருது

image

புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. ‘முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மறுதாம்பு கரும்பு சாகுபடி, எலுமிச்சை, மரப்பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்குகிறார். இவரின் இயற்கை விவசாயப் பணிகளைப் பாராட்டி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று(மார்ச் 22) ‘வேளாண் வேந்தர்’ விருது அளித்துள்ளது.

News March 22, 2025

தென்காசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – டீ மாஸ்டர் கைது

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ கடை மாஸ்டர் கைது செய்யப்பட்டார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முகமது இஸ்மாயில் (44) என்பவரை நேற்று (மார்ச்.21) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சங்கரன்கோவில் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

News March 22, 2025

தென்காசி மாவட்ட காவலர்கள் இரவு ரோந்து பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்,அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்ளது.

News March 21, 2025

விசாக நட்சத்திரக்காரர்கள் தரிசிக்க வேண்டிய ஆலயம்

image

முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரக்காரர்கள் கோவிலாக தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை முத்துக்குமரசுவாமி கோவில் உள்ளது.விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களைக் கொண்டது. இந்த கிரகணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும். *மற்றவர்களுக்கு பகிருங்கள்*

News March 21, 2025

தென்காசி மாவட்டத்தில் மீண்டும் மினி பஸ்கள்

image

தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய மினி பேருந்து திட்டம்-2024 ன் கீழ் தென்காசி மாவட்டத்தில் 53 சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அதற்கான ஆணைகளை இன்று வழங்கினார். இதையடுத்து தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கிராமங்களில் மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. *இந்த நற்செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்*

News March 21, 2025

தென்காசியில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். SHARE IT.

News March 21, 2025

கடனா அணைப் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஆழ்வார்குறிச்சி அருகே கடனா அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 61.30 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 கன அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

சிவகிரி: 30 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் தகனம்!

image

தென்காசி மாவட்டம் சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சக்தி ராகவேந்திரன்(44). சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராகவேந்திரன், கடந்த 18ஆம் தேதி இரவு இயற்கை மரணம் அடைந்தார். தொடர்ந்து, நேற்று(மார்ச் 20) அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

News March 20, 2025

தென்காசி: இரவு காவல் அதிகாரிகள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 20 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!