Tenkasi

News March 26, 2024

தென்காசி வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல்

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் அறிமுக கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள கலைஞர் திடலில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதைத்தொடர்ந்து தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2024

தென்காசி ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின்போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று, உயிரிழந்தார்.இதனிடையே, வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் இன்று அங்கன்வாடி பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News March 26, 2024

தென்காசியில் அண்ணாமலை பிரச்சாரத் தேதி அறிவிப்பு

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 4-ம் தேதி வியாழக்கிழமை தென்காசி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. அதற்கான பிரச்சார ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2024

தென்காசி அருகே மூன்று பேர் கைது 

image

மேலகரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், முருகன் மற்றும் மாரியப்பன் ஆகிய மூவருக்கும் மாடசாமி கோவில் தொடர்பாக பகை இருந்துள்ளது.இந்நிலையில் 25ம் தேதி செல்வராஜ் மேலகரத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேரும் செல்வராஜை தாக்கினர். அதை தடுத்த அவரது மனைவியையும் மிரட்டியுள்ளனர் இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரில் குற்றாலம் போலீசார் 3 பேர் கைது

News March 25, 2024

வாக்காளர் விழிப்புணர்வு தூதுவர்களுக்கு நியமன ஆணை

image

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று
கல்லூரி மாணவிகள் சுரண்டை காமராஜர் கல்லூரி அபிதா பெல்சியா, ஆலங்குளம் அரசு கல்லூரி சன்மதி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேச்சியம்மாள் ஆகியோருக்கு விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணையை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.

News March 25, 2024

நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

சங்கரன்கோயிலிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன்,  திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர்
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தென்காசி:அமைச்சருடன் திமுக வேட்பாளர் சந்திப்பு

image

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வருகை தந்த தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை,தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

News March 24, 2024

சங்கரன்கோவில் அருகே மூதாட்டி பலி

image

சங்கரன் கோவில் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி (70) என்ற மூதாட்டி பொதிகை தெப்பக்குளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!