Tenkasi

News March 31, 2024

தென்காசியில் இன்று பதிவான வெப்பம் எவ்வளவு தெரியுமா?

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. அருகே உள்ள கேரளாவிலும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் இங்கும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 99.5 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களிலும் நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டனர்.

News March 31, 2024

தென்காசியில் கிருஷ்ணசாமி பெயரில் இருவர் போட்டி

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு தலா தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News March 31, 2024

தென்காசியில் வைகோ பிரச்சார நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் அவர், 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவேங்கடம் பகுதியில் பேசுகிறார். 5 மணிக்கு சங்கரன் கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 7 மணிக்கு கடையநல்லூரில் உரையாற்றுகிறார்.

News March 31, 2024

தென்காசி சிபிஐ எம்எல் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி மாவட்ட சிபிஐ கட்சி எம்எல் ஊழியர் கூட்டம் இன்று ரோஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சிபிஐ எம்எல் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழ ஆசைத்தம்பி, சங்கரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினர்.

News March 31, 2024

தென்காசி: 6 பெண்கள் உட்பட 10 பேர் கைது

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் பேரில் வாசுதேவநல்லூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 10 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 30, 2024

தென்காசி: கத்தியால் குத்திக் கொலை.. ஒருவர் கைது

image

மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

News March 30, 2024

தென்காசியில் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (30/03/24) வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ”ஆற்றுப்படை அறக்கட்டளை” இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை தென்காசி பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

News March 30, 2024

மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

News March 30, 2024

தென்காசி: மக்களின் பிரச்சினைக்கு தீர்வு 

image

தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் ஸ்கூல் சொசைட்டி அருகில் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து கண்டறிந்து அதற்கான தீர்வு காண வழிவகுப்பேன் என்று உறுதி கூறினார்.

News March 30, 2024

தென்காசி அருகே 10 பேர் அதிரடி கைது 

image

வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே கணேசன் என்பவர் கட்டிடம் மற்றும் கலைஞர் காலனியில் முருகேசன் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று  வாசுதேவநல்லூர் போலீசார் சங்கனாபேரியைச் சேர்ந்த பசுபதி (28),சத்யா (23),ராணி ஸ்ரீ ஜான்சி (23),சுந்தரத்தாய் (25),கணேசன் (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்

error: Content is protected !!