India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்காசியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பேசியதாவது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 8915 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அமர் சேவா சங்கச் செயலாளர் சங்கர் ராமன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக சேவைகளை செய்து வருகிறார் எனவே அவரை மாவட்டத்தின் சின்னமாக அறிவித்ததன் மூலம் சமூகத்தில் தேர்தல் தொடர்பான அதிக விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.
திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் சிறப்புரையில் மே மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 7, 14, 21, 28 மே 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுதானதால் மின் மோட்டாரின் பழுதுகளை சரி செய்ய நேற்று 3ம் தேதி மாலை கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியை பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.
தென்காசி காளிதாசன் நகரில் இன்று காலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவு படி புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(23), தூத்துக்குடி முத்துகல்யாணி (22), சிந்தாமணிபேரிப்புதூர் கலைச்செல்வன்(19), தென்காசியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பீர் முகமது(52), புளியங்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் மணிகண்டன்(40) ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் தெருவே சேர்ந்த முத்துக்குமார் மனைவி ராஜலட்சுமி வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் பேட்டரிக்கு தண்ணீர் ஊற்றும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.