India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான குற்ற கலந்தாய்வு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 15-ம் தேதி காலை தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருந்து அப்துல்கலாமின் நினைவை போற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. தங்களுடைய குடும்ப அட்டை ஆதார் உள்ளிட்டவற்றை பாலித்தீன் கவரில் பத்திரப்படுத்தி கொள்ளுமாறு” கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில் கோட்டாட்சி தலைவர் ஜெயசந்திரன், முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களின் அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த தம்பதியிடம் கொடுக்கின்ற பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி தென்காசியை சேர்ந்த நபர்கள் ரூ.89 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வீடு நிலங்களை விற்று, பணத்தையும் இழந்து தவிப்பதாகவும், தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தென்காசி, சின்னக் கோவிலான்குளத்தில் நேற்று இளைஞர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற கரிவலம்வந்தநல்லூர் அணிக்கு முதல் பரிசு ரூ.5,001ஐ திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை வழங்கினார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெள்ளத்துரை, மகாராஜன், செந்தில்குமார், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராஜா எம்எல்ஏ நேற்று(அக்.,13) மாலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சுரண்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று(அக்.,13) மாலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி எம்எல்ஏவுமான எஸ்.பழனி நாடாரை தென்காசி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வீரன் தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது பெரியார் பிறந்தநாள் விழா கூட்டம் தொடர்பாக ஆலோசனை செய்தனர். உடன் திமுக நிர்வாகிகள் முத்துக்குமார், பூல் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
தென்காசி மாவட்ட காவல்துறை நேற்று (அக்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமீப காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி நடைபெற்று வருகிறது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி போன் வந்தால் அதனை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.