Tenkasi

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி, வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

விவசாயிகள் உறுதிமொழி எடுத்து விழிப்புணர்

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான விவசாயிகளும் பங்கேற்று 100% வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுத்தனர்.

News April 6, 2024

தேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு 

image

சுரண்டையைச் சேர்ந்தவர் பீமன் என்பவர் மகள் எஸ்.ஆக்னஸ் ஷைனி. இவர் பாவூர்சத்திரம் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் ஜம்மு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 23-வது சப்-ஜூனியர் தேசிய ஊசூ சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவரை இன்று தென்காசி எம்எல்ஏ பழனி பாராட்டினார். 

News April 6, 2024

தென்காசி: பதற்றமான வாக்குச்சாவடி வெளியீடு

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 124 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 9 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

தென்காசி அருகே பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆய்வு

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வாக்கு சாவடிகளில் நேற்று மாலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதைத்தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.இதில் ஏராளமான காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

image

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் முறை கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பொருட்டு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் பேசினார். 

News April 5, 2024

வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றும், இன்றும் சிவகிரி வட்டார உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சிகளின் வீடு வீடாகச் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குவது மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

News April 5, 2024

தென்காசி: சதத்தை கடந்த வெயில்

image

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் இப்போதே அக்னி நட்சத்திர தாக்கம் போல் கொளுத்துகிறது. இன்றும் (ஏப்ரல்.5) காலை முதல் வெயில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் 1.15 மணிக்கு தென்காசி நகரப் பகுதியில் வெப்ப பதிவு 101 டிகிரியாக உயர்ந்தது. சுட்டெரித்த வெயிலில் சாலையில் நடந்து சென்றவர்கள் புழுக்கத்தில் தவித்தனர்.

News April 5, 2024

தென்காசி: திமுக சாதனை பட்டியலிட்ட நடிகர்

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து திரைப்பட நடிகரும், திமுக பிரமுகருமான வாகை சந்திரசேகரன் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். குத்துக்கல்வலசையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

News April 5, 2024

தென்காசி: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

image

காசிநாத புரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பிரேமா (41). இவர் கடந்த 30 ஆம் தேதி தனது மகன் மாரியுடன் பைக்கில் சென்று திரும்பியபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!