India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடுகிறார். அவருக்கு தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு இன்று 12ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து பேசும்போத, இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் மோடியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தல் என்று பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி, சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் முடித்துக்கொண்டு திரும்பியபோது , தென்காசி கரட்டுமலை சோதனைச்சாவடியில் உதயநிதி காரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தென்காசிக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி மூலம் சுழற்சி முறையில் நுண் பார்வையாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே. கமல்கிஷோர் பணி ஒதுக்கீடு செய்தார்.
சங்கரன்கோவிலில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்களிடம் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையிலான அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தொடர் பயிற்சி வகுப்பு 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இந்த பயிற்சி வகுப்பில் தலைமை அலுவலர்கள் கையேடுடன் ஆஜராக வேண்டும். கடந்த முறை பங்கேற்க தவறியவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று மாற்றுதிறனாளி வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு கவிதை போட்டி வரும் 12 ஆம் தேதி கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. போட்டி தலைப்பு தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, எனது ஓட்டு எனது உரிமை (ஏதேனும் ஒன்று) என தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கிளாங்காட்டை சேர்ந்த செந்தில்குமார், இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக புதுக்கோட்டை வினோத் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வினோத்குமார் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டதால் செந்தில்குமார், அழகு மற்றும் குணா ஆகியோர் சேர்ந்து வினோத்குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தார்.
Sorry, no posts matched your criteria.