Tenkasi

News April 19, 2024

கலிங்கப்பட்டியில் வைகோ வாக்களிப்பு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில்
இன்று வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாக்கை பதிவு செய்தார். இதில் ஏராளமான பொதுமக்களும் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

News April 19, 2024

சங்கரன்கோவிலில் வாக்கு செலுத்திய துரை வைகோ

image

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். மதிமுக தலைமை நிலைய செயலாளரும் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை.வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 18, 2024

தென்காசி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

தென்காசி: நாளை விடுமுறை

image

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் காந்திஜி நூற்றாண்டு நினைவு காய்கறி சந்தையானது தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காந்திஜி நூற்றாண்டு நினைவு தினசரி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை என பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று விடுமுறை அளித்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

News April 18, 2024

தென்காசி தொகுதி: இது உங்களுக்கு தெரியுமா!

image

2019 மக்களவைத் தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தனுஷ் குமார் வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 4,76,156 (44.7%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தங்கராஜ் என்பவர் 727 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 17, 2024

தென்காசி: தங்கும் விடுதியில் கலெக்டர் ஆய்வு

image

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவு படி மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

News April 17, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

தென்காசி: இன்று முக்கிய உத்தரவு

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இன்று தொடங்கி உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

News April 16, 2024

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பணி

image

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகின்றனர். தென்காசியில் இன்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.

News April 16, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மாலை 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!