Tenkasi

News April 24, 2024

இலஞ்சி திருமலைக்குமரன் கோவில் தேர் திருவிழா

image

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் பிரசித்தி பெற்ற திருக்குமரன் திருக்கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 22, 2024

தென்காசி அருகே மூன்றாவது நாளாக தீவிர சோதனை

image

புளியரை தமிழக கேரள எல்லைப் பகுதியில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இன்று மூன்றாவது நாளாக
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னர் அனுமதிக்கப்படுகின்றது.இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்

News April 22, 2024

தேர்தல் பணி முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு

image

தென்காசி உட்கோட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தென்காசி சிவா திருமண மண்டபத்தில் இன்று மாலை பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டு இனிப்பு, காரம் ,தேநீர் விருந்து அளித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

News April 21, 2024

தென்காசியில் இன்று 101.8 டிகிரி வெப்பம் பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து இன்றும் (ஏப்ரல் 21) காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 101.8 டிகிரியாக உயர்ந்தது. சாலைகளில் சென்றவர்கள் மட்டுமின்றி வீடுகளுக்குள் முடங்கி கிடந்தவர்களும் வெப்பம் காரணமாக அவதிப்பட்டனர். இரவிலும் புழுக்கம் உணரப்பட்டது.

News April 21, 2024

தென்காசியில் 5 மணி வரை..

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, குமரி, கோவை, தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்று மாலை 5 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 21, 2024

தென்காசி: பீடி தொழிலாளி மகள் ஐஏஎஸ்

image

செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பீடித் தொழிலாளி ஸ்டெல்லாவின் மகள் இன்பா சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.    இன்று அவரை சிபிஐ எம்எல் மற்றும் தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட செயலாளர் புதியவன் (எ) சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.

News April 21, 2024

தென்காசி: மின்னணு எந்திரங்கள் அறைக்கு சீல்!

image

தென்காசி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

தமிழக, கேரள எல்லையில் தீவிர சோதனை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ள தகவலில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News April 20, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை?

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!