Tenkasi

News April 24, 2024

தென்காசி: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் விரைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

தென்காசியில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

image

தென்காசி நகராட்சி, ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் ,படியும் ,சுகாதார அலுவலர், மற்றும் ஆய்வாளர்கள் அறிவுரையின்படியும், இன்று காலையில் தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 24, 2024

தென்காசி அருகே சோதனைச்சாவடியில் ஆய்வு

image

கேரள மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து இன்று காலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் பணிகளை நேரில் சென்று அதிரடி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்ப வேண்டும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

News April 24, 2024

தென்காசி அருகே 4 பேர் கைது

image

பாவூர்சத்திரம் சாலடியூர் விலக்கில் போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது 3 பைக்குகளில் சென்ற நான்கு பேரை தடுத்து சோதனை செய்தபோது அவர்கள் 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 310 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. மது பாட்டில்கள் கடத்திய ஆவுடையானூர் செல்வன் (52), லட்சுமியூர் சுடலை முருகன் (36), கல்லூரணி ஆனந்த் (35), கீழப்பாவூர் ராமராஜன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

News April 24, 2024

தென்காசி -பாலருவி ரயில் திடீர் ரத்து

image

திருநெல்வேலியில் இருந்து தென்காசி புனலூர் வழியாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 22) இரு மார்க்கத்திலும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபோல் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயிலும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. திடீர் ரத்து காரணமாக இந்த ரயிலை எதிர்பார்த்த பயணிகள் அவதி அடைந்தனர்.

News April 24, 2024

முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு கூட்டம்

image

குற்றாலத்தில் நேற்று நடைபெற்ற ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகி எம்.பி. முகைதீன், தலைமையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஒவ்வொரு வருடமும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 24, 2024

தென்காசி மாவட்ட வெப்ப பதிவு நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து அக்னி நட்சத்திர நாட்களை நினைவுபடுத்தும் வகையில் கொளுத்தி வருகிறது. இன்று காலை முதல் மாலை வரை வெப்ப தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்ப பதிவு 101.5 டிகிரியாக உயர்ந்தது. வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.

News April 24, 2024

தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

தென்காசி: பள்ளி மாணவர்களை பாராட்டிய எஸ்பி

image

தென்காசி மாவட்ட, எஸ்பி அலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற நெடுவயல் சிவசைலநாதர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.மேலும் மாணவர்கள் நன்கு படித்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

News April 24, 2024

தென்காசியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11 மணிக்கு இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!