Tenkasi

News April 26, 2024

தென்காசி: கோடை கால சிறப்பு முகாம்

image

தென்காசி,ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் இன்று தமிழ்நாடு வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.இதில் மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 26, 2024

ரூ.1.50 மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

image

சங்கரன்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டிஎஸ்பி சுதீர் உத்தரவின் பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோமதிபுரம் தெருவில் உள்ள கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 135 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

News April 26, 2024

வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.    கூட்டத்திற்கு தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர். செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார். கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், கனிமவள வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும், சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 25, 2024

தென்காசி கலெக்டர் முக்கிய வேண்டுகோள்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். மதியம் 11 மணி முதல் மூன்று முப்பது மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது.

News April 25, 2024

தென்காசியில் கலெக்டர் தகவல்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  கோடை காலத்தை அடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல், சளி இருமல், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை , மஞ்சள் காமாலை, மனிதர்கள் பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை கீழ்காணும் https://ihip.mohfw.gov.in/cbs/-1 என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம் என்றார்.

News April 25, 2024

தென்காசி: சென்னைக்கு தினசரி ரயில்

image

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி நேரடி ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்களில் அதிக வருவாயை தென்காசி ரயில் நிலையம் ஈட்டி தர தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையாக இருப்பதால் இந்த ரயில் மார்க்கத்தில் கோடைகால சிறப்பு ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 25, 2024

தென்காசியில் எச்சரிக்கை விழிப்புணர்வு

image

தென்காசி நகராட்சியில் இன்று சுவாமி சன்னதி பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு செய்யப்பட்டது.மேலும் மஞ்சப்பை உபயோகத்தை வலுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 25, 2024

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிறப்பு!

image

தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், உலகம்மன் கோவில் அல்லது தென்காசி பெரிய கோவில் என்று அழைக்கப்படுகிறது. கிபி.1445-1446 இல் பரக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. சிற்றாறு எனும் ஆற்றங்கரையில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளது.

News April 25, 2024

தென்காசி: அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சுந்தரபாண்டியபுரம் பேரூர், குற்றாலம் பேரூர் கழகம் ஆகிய பகுதிகளில் இன்று கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது
தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான செல்வ மோகன் தாஸ் பாண்டியன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர், தர்பூசணி, லெமன் ஜுஸ், ஆகியவற்றை வழங்கினார்.

News April 25, 2024

தென்காசி:உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

தென்காசி நகராட்சியில் இன்று 25.04.2023 சுகாதார அலுவலர் தலைமையில் மாட்ட கல்வி அலுவலர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மற்றும் துணை வல்லுனர், ஆகியோரின் பங்கேற்பில் மற்றும் மலேரியா ஒழிப்பு தடுப்பு குழு இணைந்து மலேரியா பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு மேலும் மலேரியா ஒழிப்புதின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!