India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் எஸ்எஸ்ஐ மனோகரன், மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் எஸ்எஸ்ஐ உமா மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பண்பொழி அருகேயுள்ள திருமலை குமாரசுவாமி கோவில் தேவார வைப்புத்தலமாகும். மேற்குத் தொடர்சி மலைத்தொடரில் உள்ள குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடப்பெற்ற இத்தலத்தில், ஆரம்பத்தில் வேல் மட்டும் வைத்து வழிபட்டிருக்கின்றனர். மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்த குளம் பூஞ்சுனை என அழைக்கப்படுகிறது. முருகன் தலமாக இருந்தாலும், தீர்த்தக்கரையில் சப்தகன்னிமார்கள் இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது,சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு ஆசிரியர் ராஜாராம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அளவில் கவிதை பயிற்சி முகாம் நடத்துவது மாவட்ட அளவில் வகுப்பு உறுப்பினர் பதிவு புதிய கிளை அமைப்பது தொடர் நிகழ்ச்சி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி நகர திமுக சார்பில் 23,25 வார்டு சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து திறந்து வைத்து நீர், மோர் மற்றும் தண்ணீர், பழம் வழங்கினார் தென்காசி நகர் மன்ற தலைவர், தென்காசி நகர கழக செயலாளர் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இன்று காலை வானில் ஒரு விமானம் தொடர்ந்து வட்டமடித்த வண்ணம் இருந்தது. ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றி சுற்றி வந்த விமானத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் தெரிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்கி வருகிறது. கடனா அணை நீர் இருப்பு இன்று (ஏப்ரல் 27) 28 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர் இருப்பு 42 அடியாக சரிந்துள்ளது. கருப்பாநதி நீர் இருப்பு 40 அடியாக உள்ளது. குண்டாறு அணை 15 அடியாக குறைந்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 62 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை.
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்.இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.