India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்கள் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.
தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் எஸ்எஸ்ஐ மனோகரன், மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் எஸ்எஸ்ஐ உமா மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பண்பொழி அருகேயுள்ள திருமலை குமாரசுவாமி கோவில் தேவார வைப்புத்தலமாகும். மேற்குத் தொடர்சி மலைத்தொடரில் உள்ள குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடப்பெற்ற இத்தலத்தில், ஆரம்பத்தில் வேல் மட்டும் வைத்து வழிபட்டிருக்கின்றனர். மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்த குளம் பூஞ்சுனை என அழைக்கப்படுகிறது. முருகன் தலமாக இருந்தாலும், தீர்த்தக்கரையில் சப்தகன்னிமார்கள் இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது,சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு ஆசிரியர் ராஜாராம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அளவில் கவிதை பயிற்சி முகாம் நடத்துவது மாவட்ட அளவில் வகுப்பு உறுப்பினர் பதிவு புதிய கிளை அமைப்பது தொடர் நிகழ்ச்சி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி நகர திமுக சார்பில் 23,25 வார்டு சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து திறந்து வைத்து நீர், மோர் மற்றும் தண்ணீர், பழம் வழங்கினார் தென்காசி நகர் மன்ற தலைவர், தென்காசி நகர கழக செயலாளர் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் தெற்கு ஒன்றியம் வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இன்று காலை வானில் ஒரு விமானம் தொடர்ந்து வட்டமடித்த வண்ணம் இருந்தது. ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றி சுற்றி வந்த விமானத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் தெரிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.