Tenkasi

News October 16, 2024

நாளை விஜய் டிவி நடிகர் புளியங்குடி வருகை

image

புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நாளை (அக்-17) 11ம் நாள் நிகழ்ச்சியாக மதுரை முத்து வருகை தருகிறார். தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் மாபெரும் யாழ் இன்னிசை மட்டும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

News October 16, 2024

காப்பீட்டுத் தொகையை தபால் நிலையத்தில் செலுத்தலாம்!

image

தென்காசியில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் ராபிய பருவத்திற்கான பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் தற்போது அறிவிக்கப்பட்டது. பயிர் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கிடையாது என்றார்.

News October 16, 2024

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஆலங்குளம் அருகே கண்டபட்டியை சேர்ந்தவர் லாரன்ஸ்(24) எலக்ட்ரீசியன். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்து வந்த இவர், நேற்று(அக்.,15) முக்குடை அடுத்த தென்திருபுவனம் அருகில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உரை கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 16, 2024

டிஜிட் ஆல் தென்காசி துவக்க விழாவிற்கு அழைப்பு

image

வாய்ஸ் ஆப் தென்காசி அமைப்பு சார்பில் டிஜிட் ஆல் தென்காசி துவக்க விழா வருகிற 20ஆம் தேதி குற்றாலம் சாலை அருணா மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல மென்பொருள் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் ஐயா சாமி நேற்று கேட்டுக்கொண்டார்.

News October 15, 2024

பேரிடர் குறித்து தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு

image

தமிழக அரசு வருகிற வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பேரிடர் காலங்கள் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இன்று (அக்.15) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை தொடர்பு கொண்டு மழைக் காலங்களில் பொதுமக்கள் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 15, 2024

பருவமழை: தென்காசியில் தயார் நிலை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு முடுக்கியுள்ளது. இதற்காக தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அதனால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. மேலும் உதவி தேவைப்பட்டால் அவரச எண் 101-க்கு அழைக்கலாம். SHARE IT.

News October 15, 2024

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில்சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்துக்கல்வலசை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வேலை வாய்ப்பு தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

பாஜகவில் இணைந்த முன்னாள் பெண்கள் கல்லூரி முதல்வர்

image

தென்காசி மாவட்டம் தென்காசி பாரதிய ஜனதா கட்சி உடைய மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் உடைய முன்னாள் முதல்வர் முனைவர். ராஜேஸ்வரி கிருஷ்ணகுமார் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக, தென்காசி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

News October 15, 2024

இன்று இரவு அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.14) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது.‌ தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

image

தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான குற்ற கலந்தாய்வு மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.