Tenkasi

News May 10, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

தென்காசியில் 7 நாட்களுக்கு மழை

image

தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி, விருதுநகர்,திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

News May 10, 2024

தென்காசி 21ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.95% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 83.93 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் தென்காசி மாவட்டம் 21ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: தென்காசியில் 92.69% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் 92.69 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.93% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.46% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

மின்னல் தாக்கியதில்- சிறுவன் பலி

image

சுரண்டை அருகே உள்ள குலையநேரியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவசக்தி (14). இவர் இன்று தனது உறவினரான மகாலிங்கம் என்பவருடன் கட்டிடம் கட்டுமான பணியை பார்த்து கொண்டு இருந்தாராம்.
அப்போது சுமார் 5 மணியளவில் திடீரென அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவலறிந்த சுரண்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

News May 10, 2024

தென்காசி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐடிஐயில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

News May 9, 2024

தென்காசியில் மே 12ஆம் தேதி கனமழை

image

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12ஆம் தேதி தென்காசியில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News May 9, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

தென்காசியில் மழை பெய்ய வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மழை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

தென்காசி:முன்னாள் நகராட்சி சேர்மன் ஆய்வு

image

செங்கோட்டை நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்
குண்டாறு அணையின் நீர்வழிப்பாதையான கருப்பசாமி கோவில் பகுதியில் இருந்து செங்கோட்டை நகராட்சி பகுதிக்கு குடிநீர் இணைப்பு அமைக்கும் பணிக்கான சாத்திய கூறுகள் குறித்து செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ரஹீம் இன்று ஆய்வு செய்தார்.

error: Content is protected !!