Tenkasi

News May 14, 2024

மழை எதிரொலி மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை இயிலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.அதில் இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதை இருந்தது.      தற்போது மழை பெய்து வருவதால் அந்த பாதையும் பாதுகாப்பு கருதி இன்றுமுதல் அடைக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிப் பாதையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

News May 14, 2024

தென்காசி அருகே நோய் பரவும் அபாயம்

image

தமிழக கேரள எல்லையான புளியரை பகுதியில் சிறுமி பேரி நீர் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழிந்தோடும் பகுதிகளில் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்கள் அதன் கழிவுகளை நீர் தேசத்தினுடைய நீர் வழிந்தோடும் பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இன்று அந்த பகுதியில் கொட்டி செல்லப்பட்ட கழிவுகளில் தீ வைத்து எரித்துள்ளதால் நோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News May 14, 2024

தென்காசி: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 14ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தென்காசி மாவட்டம் 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 88.42% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 80.97 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: தென்காசியில் 93.02% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் 89.25% பேரும், மாணவியர் 96.31% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 93.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

தென்காசியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேல்வழி மண்டல கீழ அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று(மே 13) பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும்மஃ(மே14) சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

தென்காசி மழைப்பொழிவு விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகிரியில் 12 சென்டி மீட்டரும், தென்காசி நகரில் 2 சென்டி மீட்டரும், கடனா அணை ஆயிக்குடி, தென்காசி aws ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளது. தென்காசியில் இன்னும் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 13, 2024

தென்காசி: முதியோர் இல்லத்தில் கல்லூரி மாணவிகள்

image

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு 12ம் தேதி ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டு வாஷிங் மிஷின் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இ.சீலா, பர்சார் என். சரவணன் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியர்  லதா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தென்காசி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!