India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் அஸ்வின் என்ற சிறுவன் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றாலம் பழைய குற்றால அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியானது. அந்த தகவல் உண்மை இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனவே பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு துறையின் மூலம் அனைத்து மொபைல் எண்களுக்கும் இந்த குறுஞ்செய்தி இன்று 8 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் சார்பில் சிறப்பு குறைகள் தீர்க்கும் முகாம் வருகிற மே 27ஆம் தேதி சீதபற்பநல்லூரில் காலை நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்ட வருங்கால வைப்பு நிதி தொழிலாளர்கள், தொழில் நிறுவனத்தினர் பங்கேற்று குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகிரியில் 8 செ.மீட்டரும் கருப்பாநதி அணை, கடனாநதி அணை ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. குற்றால அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தென்காசியில் நேற்று பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவி இருப்பதால் தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி அருவிகளில் முக்கிய அருவியானது சிற்றருவி. ஆனால், இந்த அருவி குற்றாலத்தை போன்று அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும் இதன் அழகு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். வனத்துறையினாரால் அழகாக கட்டமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அருவிக்குச் செல்ல வனத்துறையினரின் அனுமதியுடன் அவர்கள் பாதுகாப்புடனேயே நடந்து செல்ல வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகள், மற்றும் அணைகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று பழைய குற்றாலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் பலியானார். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட்(Orange alert) விடுத்துள்ளது. இதனால் கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே குற்றால அருவிகள், அணைகள், சுற்றுலா தளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் – 1077, 04633 290548 என்ற எண்களில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நெல்லை பகுதியை சேர்ந்த அஸ்வின் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவன் இன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவிக்கு சற்று தொலைவில் உள்ள இரட்டை கால்வாய் என்கின்ற பகுதியில் அஸ்வினை தற்போது சடலமாக தீயணைப்புத்துறை,போலீசாரும் மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.