India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் 15 வயது முதல் 35 வயது உள்ள 3 ஆண், 3 பெண்களுக்கு இளைஞர் விருது வழங்கப்படுகிறது விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க பரிசு வழங்கப்படும் சமூக வளர்ச்சி சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்க இது வழங்கப்படுகிறது. மே 31ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை இந்திரா காலனியை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மகன் கனகராஜ். நேற்று இரவு வீட்டின் முன்பு பேசி கொண்டிருக்கும் போது 5 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டியதில் கனகராஜ் சம்பவ இடத்திலே பலி. நடராஜன் படுகாயம் அடைந்தார். ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிரிவு மின் அலுவலகத்தில் மின் நுகர்வோர் “கியூ ஆர்” கோடு வசதி மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை உதவி மின் பொறியாளர் முகமது உசேன் மின் கட்டணம் செலுத்த வந்த நுகர்வோருக்கு நேற்று (மே 21) செயல் விளக்கம் அளித்தார். பொதுமக்கள் இந்த நடைமுறையை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிரிவு மின் அலுவலகத்தில் மின் நுகர்வோர் “கியூ ஆர்” கோடு வசதி மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை உதவி மின் பொறியாளர் முகமது உசேன் மின் கட்டணம் செலுத்த வந்த நுகர்வோருக்கு நேற்று (மே 21) செயல் விளக்கம் அளித்தார். பொதுமக்கள் இந்த நடைமுறையை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
குமந்தபுரத்தில் அருள்மிகு காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் வைகாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை,மாலை வேலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நேற்று முக்கிய நிகழ்வாக காலையில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தென்காசிக்கு நாளை (மே.22) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரின் மனைவி உச்சிமாகாளி (36) .இவர் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டதால் தீக்குளித்தார் .தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் பொ ஜெயா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 இல் இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அதி கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு ரெட் அலெர்ட் விடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீட்பு படைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் நேற்று(மே 20) மாவட்ட பகுதிகளில் கனமழை பெரிதாக இல்லை. இதனால் ரெட் அலர்ட் நீங்கி மஞ்சள் அலர்ட் தொடர்கிறது.
Sorry, no posts matched your criteria.