Tenkasi

News March 29, 2025

கடையம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

image

கடையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் கடையம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அங்கிருந்த வியாபாரிகள் மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 29, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

தென்காசி: பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்

image

தென்காசி மாவட்டத்தில் திருக்குற்றாலநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், தென்பழனி ஆண்டவர் கோயில், சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில், சாயமலை உமையொருபாகேஸ்வரர் கோயில், தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோயில், சாம்பவர் வடகரை மதுரவாணி அம்பாள் கோயில், வைத்தியலிங்கம் கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயிலாகும். *ஷேர் பண்ணுங்க*

News March 28, 2025

அணிவகுத்து நிற்கும் கனரக லாரிகள்

image

தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் அரசின் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரியில் செல்லும் வழியில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரயிலுக்காக மூடப்படும் போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அணிவகுத்து வரிசையாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

News March 28, 2025

தென்காசியில் உணவு பதப்படுத்தும் கிளஸ்டர்: MP வலியுறுத்தல்

image

தென்காசி மாவட்டம் மாம்பழம், எலுமிச்சை, வாழைப்பழம், தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இப்பகுதிகளில் அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் கடுமையான இழப்புகளை விவசாயிகள் சந்திக்கின்றனர். இதனை தடுப்பதற்காக தென்காசியில் உணவு பதப்படுத்தும் கிளஸ்டர் அமைக்க வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேற்று(மார்ச் 27) மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

News March 28, 2025

தென்காசி மாவட்டத்தில் இன்று வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு இயல்பை விட இன்று(மார்ச் 28) 3°C வெப்பநிலை அதிகரித்து வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 100°F வெப்பநிலையை தாண்டி வெயில் பதிவாகும். எனவே மதிய வேளையில் முதியோர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.

News March 28, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

News March 27, 2025

கைவினைக் கலைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று (மார்ச்-26) வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் கட்டட வேலைகள் மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 வகையான கைவினை தொழில்களுக்கு தொழில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>> செய்யவும். கைவினை கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் . *மற்றவர்களுக்கும் ஷேர் செய்வும்*

News March 27, 2025

சிவசைலம் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

image

தென்காசி மாவட்டத்தில் மார்ச் 29ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பங்கேற்க உள்ளார். எனவே, அனைத்து ஊராட்சி பொதுமக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஊராட்சி தலைவர் மலர் மதி சங்கர பாண்டியன் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!