India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியை சேர்ந்த மாணவர்கள் சன் யோகா ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் முஹில்வர்ஷன், சௌமித்ரன், சஞ்சனா, ஆகியோர் தாய்லாந்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பக்கங்கள் வென்று இன்று ஊர் வந்தனர். அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பிரதான அணைகளான, கடையம் அருகே உள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 33.50 அடி, 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 44.50, 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையின் நீர்மட்டம் 32.48, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளதாக இன்று(மே 22) காலை தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் சூறைகாற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள், அருகிலேயே அல்லது கிழே நிற்க வேண்டாம். மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல் புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் வான்வெளி மண்டலத்தில் சாகசம் செய்தமைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(31). இவரின் மனைவி கவிக்குயில் என்பவருக்கு, முன்னாள் காதலர் வெங்கடேஷுடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று இரவு கனகராஜை வெட்டி கொலை செய்தார். தடுக்கச் சென்ற நடராஜனுக்கு வெட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதியில் தண்ணீர் குறைந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதையும், தடை இருந்தபோதும் அருவியை காண வரும் சுற்றுலா பயணிகளை ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே தடுப்பு அமைத்து அனுமதிக்க மறுப்பதையும் சுட்டிக்காட்டி, குற்றால சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வரும் வியாபாரிகளை பாதுகாக்க கோரி நேற்று(மே 22) ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று 6வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தடம் என்ற அறக்கட்டளை சார்பாக வருகிற 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை அங்குள்ள கோகுல் திருமண மஹாலில் வைத்து உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை பிளஸ் டூ முடித்த மாணவ ,மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குலசேகரமங்கலம் சேர்ந்தவர் காசிராஜன் (23).இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. காசிராஜன் இன்று தனது மனைவியின் ஊரான பாறை குளத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வீரசிகாமணி அருகே கார் வந்து கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி அருகில் உள்ள ஓடைக்குள் கவிழ்ந்ததில் காசிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு நாளை (மே.23) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அதி கனமழை பதிவாகக் கூடும்.
Sorry, no posts matched your criteria.