India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் பொ ஜெயா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,சுரண்டை, காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 30ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், முதல் பொது கலந்தாய்வு ஜீன் 10., 12, 14. தேதிகளிலும். 2ம் பொது கலந்தாய்வு ஜீன்:24. 26. தேதிகளில் நடைபெறும் என்றார்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக தென்காசி செங்கோட்டை ,புளியரை, குற்றாலம் ,ஐந்தருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிக்க குளிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியினை முடித்தவர்களுக்கு ஜெர்மனி ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகளில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த பணிகளில் பணிய அமர்த்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நடத்தும் அயல்நாட்டு மொழிகள் பயிற்சி கட்டணமின்றி வழங்க உள்ளதாகவும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்திய விமானப்படை சார்பில் பெங்களூரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னிவீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 3ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இசைக்கருவியில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் வருகிற22 ஆம் தேதி முதல் ஜூன் 6 வரை இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அனுமன் நதிக்கரையில் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதனை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பாக நாளை 25ஆம் தேதி அகற்றி நாட்டு மரங்கள் நட உள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க தன்னார்வலர்கள் மற்றும் சமூக இயற்கை நல அலுவலர்கள் கலந்து கொள்ளுமாறு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது என வந்த செய்தி தவறானது என தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென்காசியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தென்காசி உட்பட 7 மாவட்டங்களில், இன்று (மே.24) காலை 10 மணி வரை ஓரிடு இடங்களில்மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை ஆரம்பித்தது முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தென் தமிழகம் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், கடையம் பகுதியில் விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி மேல்பட்ட கால்வாய் திட்டப்பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. தற்போது கூடுதலாக 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இந்த பகுதி விவசாயிகள் தமிழக முதலமைச்சருக்கும்,திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.