India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநல நிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த காவல் துறையினர்15 நபர்களுக்கு மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் இன்று காவலர் சேமநலநிதி உதவித்தொகை வழங்கினார்.உடன் காவல் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
தென்காசி மேல மெஞ்ஞானபுரம் தென்காசி டிஸ்ட்ரிக்ட் கிளப்பில் வைத்து திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் ரைபில் கிளப் சார்பாக நெல்லை ,தூத்துக்குடி, குமரி, ராஜபாளையம், திண்டுக்கல் மாவட்டங்கள் இடையான துப்பாக்கி சுடும் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் செகரட்டரி வேலு சங்கர் விழாவிற்கு தலைமையேற்று வெற்றி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டு வகையான பிரிவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவின் போது இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்ட பொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 30-ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் இன்று தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
கடையம் பெரும்பத்து ஊராட்சி மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம் 131-வது ஆலய பிரதிஷ்டை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இதில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் பாட புத்தகங்கள், நோட்டுகள், புவியியல் வரைபடம் போன்றவை வழங்கப்பட உள்ளன இதைத்தொடர்ந்து 2வது கட்டமாக கல்வி உபகரண பெட்டி, செருப்பு, சீருடை போன்ற நலத்திட்ட பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பொருள்களை ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மிகுதியாக விண்ணப்பம் செய்துள்ள 166 பள்ளிகளுக்கான சேர்க்கை வரும் 28ம் தேதி குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது. சேர்க்கை நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு துறை பிரதிநிதியாக அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிஇஓக்கள் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.25) 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.