Tenkasi

News May 29, 2024

காற்றின் வேகம் அதிகரிப்பு.. மின் பராமரிப்பு பணி

image

தென்காசி மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பல இடங்களில் மின் பாதையில் மரங்கள் சரிந்து தடை ஏற்படுகிறது. இதையடுத்து இன்று (மே 29) மின்வாரியம் சார்பில் மின் மாற்றி பராமரிப்பு மற்றும் மரம் வெட்டும் பணிகள் மேலகரம் -பாரதி நகர், தென்காசி கிராமப்புற கலவி திரவிய நகர் பீடரில் காலை முதல் நடைபெற்று வருகிறது.

News May 29, 2024

தபால் துறையில் அஞ்சலக அடையாள அட்டை சேவை

image

தென்காசி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் இந்திய அஞ்சல் துறை பொதுமக்களின் முகவரியை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சலக அடையாள அட்டை சேவையை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பத்தை அஞ்சலகத்தில் 20 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். பிறகு ஒவ்வொரு ஆண்டும் 100 ரூபாய் செலுத்தி இந்த அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என அஞ்சலக அதிகாரி இன்று தெரிவித்தார்.

News May 29, 2024

தென்காசி அருகே ஐந்து பேர் கைது

image

கடையம் அருகே மேல குத்தபாஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (55).இவர் வீட்டு அருகில் உள்ள கேட்டை புறம்போக்கு நிலம் எனக் கூறி மணிராஜ் (27), அவரது சகோதரர்கள் மாரிசெல்வம் (25), பிரசாத் பாபு (21),சிவா (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கேட்டை உடைத்து ,அர்ஜுனனை கல்லால் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News May 28, 2024

வெள்ள எச்சரிக்கை கருவிகள் பொருத்தும் பணி

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஒரு சிறுவர் உயிரிழந்தார். தொடர்ந்து வடக்குழு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வெள்ளத்தை கண்காணிக்க பல்வேறு திட்டங்களை வகுத்த நிலையில் இன்று மாலை பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவி பகுதியில் வெள்ளம் ஏற்படும் போது எச்சரிக்கையாக அதிக ஒலி எழுப்பான் கருவி பொருத்தப்பட்டது.

News May 28, 2024

தென்காசி பல்கலைக்கழக பதிவாளர் முக்கிய அறிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வருகிற ஜூன் 7, 8ஆம் தேதிகளில் “செட்” தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. பாடங்கள் வாரியாக தேர்வு நடக்கும் தேதி, நேரம் விவரங்களை பல்கலைக்கழக www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

தென்காசி புலியருவி குறிப்பு!

image

தென்காசி குற்றால அருவிகளில் ஒன்றான, புலியருவி பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. இது பிரதான அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு அருவி. இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகின்ற சமயத்தில் மட்டுமே நீர் வருகின்றது. மிகவும் பாதுகாப்பான ஒரு அருவி. சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி உண்டு.

News May 28, 2024

தென்காசி மழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்யக்கூடும். தமிழகம் முழுவதும் கோடையில் பெய்து வந்த மழை தற்போது நின்று வெப்பநிலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 28, 2024

தென்காசியில் பரவலாக மழை பெய்யும்

image

தென்காசியை சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் ராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், குற்றாலம், தென்காசி ,வால்பாறை, நீலகிரி, பணகுடி ,திருக்குறுங்குடி,மாஞ்சோலை, காக்காச்சி,வள்ளியூர், கல்லிடை குறிச்சி ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என அறிவித்தார்.

News May 28, 2024

தென்காசி அருகே இரவு தொடர் மின்தடை

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் மதினாநகர், கிரசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியத்திலிருந்து மின் தடை அடிக்கடி ஏற்பட்டது. குறிப்பாக அங்கு சில வீடுகளில் தொடர்ந்து மின்தடை உள்ளது. இது குறித்து மின்வாரிய நிர்வாகி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை இல்லை. இதனால் இரவு வரை இந்தப் பகுதி மக்களுக்கு சிரமம் நீடித்தது. இவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை.

News May 27, 2024

அதிகாரி முக்கிய ஆலோசனை

image

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்கியுள்ளதால் மின்னோட்டத்திற்கு தடை ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதை தவிர்ப்பது குறித்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகரிக்கும் என்பதால் மின்பாதைகளில் ஊடுருவும் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!