Tenkasi

News May 31, 2024

தென்காசி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (31.05.2024) வாக்கு எண்ணிகை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.      இதில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார். முகாமில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 31, 2024

4ம் தேதி டாஸ்மாக் கடை அடைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற 04.06.2024 அன்று நடைபெறுவதை ஒட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் அன்று காலை 10 முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

News May 31, 2024

தென்காசியில் டெய்லரிடம் ஆன்லைனில் ரூ 5000 மோசடி

image

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குறி வைத்து செல்போனை தொடர்பு கொண்டு கியூ ஆர் கோடு அனுப்புகிறோம். அதில் ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என கூறி மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மேலகரம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் செல்வம் என்பவரது எண்ணுக்கும் நேற்று அழைப்பு வந்து 5 ஆயிரத்து இழந்துள்ளார். இது குறித்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 31, 2024

தென்காசியில் மதுபானக் கடைகள் மூடல்

image

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் வருகிற ஜூன் நான்காம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும் என இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

News May 30, 2024

தென்காசியில் தென்மேற்கு பருவமழை

image

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மே 30) கூறியதாவது,தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.இதன் காரணமாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவ மழை மிக தீவிரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

தென்காசி குண்டாறு அணை சிறப்புகள்!

image

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசியின் சுற்றுலாத்தலமான குண்டாறு நீர்த்தேக்கம் திருநெல்வேலியின் பாசனத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 1983 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இயற்கை நீர்த்தேக்கமான இதன் நீளம் 389 மீட்டராகவும், உயரம் 36.10 மீட்டராகவும் அமைந்துள்ளது. இதன் கொள்ளவு 25 மில்லியன் கனஅடி ஆகும். இதன் கட்டுமானப் பணிகள், 1979 – 1983 ஆண்டு வரை நடைபெற்று நிறைவு செய்யப்பட்டது.

News May 30, 2024

புதுகை: கட்டிடம் கட்டுவதற்கு நிதி

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது. தற்போது தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. எனவே அலுவலகம் கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார்.

News May 29, 2024

தென்காசி ஆராய்ச்சி உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சக அறிவிப்பின்படி 2024-2025ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் இணையவழியில் விண்ணபிக்கலாம் என இன்று 29ம் தேதி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.

News May 29, 2024

தென்காசி: மாணவர்களுக்கு  உதவித்தொகை

image

தென்காசி மாவட்டத்தில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31 ஆகும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

News May 29, 2024

பாஜக நிர்வாகி தெற்கு ரயில்வே மேலாளரிடம் மனு

image

தென்காசியை சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி மருது பாண்டியன் இன்று மதுரை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் (AGM ) கௌசல் கிஷோரை நேரில் சந்தித்து பொதிகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம் மற்றும் தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம், செங்கோட்டையில் பிட் லைன் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

error: Content is protected !!