Tenkasi

News June 2, 2024

தென்காசி மாவட்டத்தில் எங்கும் மழைப்பதிவு இல்லை

image

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கி உள்ள நிலையில் இன்று காலை வரை எங்கும் மழை பதிவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அணை பகுதிகளிலும் காற்று மட்டும் வீசியது. மழை இல்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து பெரிய மாற்றம் இல்லை. கடனா அணைக்கு 7 கன அடி நீர் மட்டுமே வருகிறது. ராமநதி அணைக்கு 10 கன அடி நீர் வருகிறது. கருப்பாநதி அணைக்கு நீர் வரத்து இல்லை.

News June 1, 2024

கையெழுத்திடும் அதிகாரம் ரத்து; கலெக்டர் அதிரடி

image

ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களில் நடந்த முறைகேடு மோசடிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொடர்ந்து புகார் மனுக்கள் அளித்ததின் அடிப்படையில்
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முதற்கட்ட நடவடிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி காசோலைகளில் கையெழுத்து இடும் அதிகாரத்தை ரத்து செய்தார்

News June 1, 2024

கிராமச் சாலையில் கனரக லாரிகள் செல்ல அனுமதி இல்லை.

image

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பகுதிகளில் உள்ள கல்குவார்கள் மூலம் கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கிராமச் சாலைகள் பலத்த சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அஞ்சான் கட்டளை ஊராட்சி பகுதி கிராமச் சாலை வழியாக கனரக லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

ஜூன் 3ம் தேதி அடையாள வேலை நிறுத்தம்

image

தென்காசி மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்டம் முழுவதும் ஜூன் 3ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவு பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.

News June 1, 2024

தென்காசி:கல்வியறிவு பயிற்சி முகாம் நடந்தது

image

குற்றாலம், ஶ்ரீ பராசக்தி ‌‍‍மகளிர் கல்லூரி, மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி பராசக்தி கல்லூரியில் நேற்று கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது விஜிலா நேசமணி அனைவரையும் வரவேற்றார்.இலக்கமுறை கல்வியறிவு பயிற்சியாளர் உதயாவேனி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பயிற்சி அளித்தார்.

News May 31, 2024

ஊராட்சித் தலைவரின் அதிகாரம் பறிப்பு

image

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை தணிக்கை குழு கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து  ஆட்சியர் கமல் கிஷோர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

News May 31, 2024

மனித உயிர்களை மீட்பவர்களுக்கான விருது அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று (மே 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விபத்துக்கள் போன்றவைகளில் மனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படும் 3 விதமான விருதுகளை பெற தகுதி உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

News May 31, 2024

தென்காசி: அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது 

image

தென்காசி, சங்கரன்கோயில் அருகே குலசேகரமங்கலம் சேர்ந்தவர் வேலுச்சாமி இவர் இன்று சேந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே கையில் அரிவாளுடன் நின்று கொண்டு அவரின் உறவினருடன் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் அரிவாள் வைத்து மிரட்டும் தொனியில் அவர் கடுமையாக பேசியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

News May 31, 2024

திருநங்கைகள் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று (மே 31) விடுத்துள்ள அறிக்கையில் திருநங்கைகளுக்கான பல்வேறு பலன் தொடர்பான சிறப்பு முகாம் ஜூன் 21ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.திருநங்கைகள் விவரம் பதிவு செய்தல்,அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை முகவரி திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கும் முகாம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

News May 31, 2024

திருநங்கைகள் நல வாரியம் மூலம் உதவி தொகை கலெக்டர்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு “தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்” 2008-ல் அமைத்து திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாரியத்தின் மூலம் திருநங்கை அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் தொடங்க மானியத்தொகை,கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.

error: Content is protected !!