India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில் மாவட்ட முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் படி மூடப்பட்டுள்ளது. போலீசார் கடைகளை கண்காணிக்கின்றனர். இதனால் நேற்று மாலையிலேயே சில மணி பிரியர்கள் தேவையான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு முன்பாக சற்று தொலைவில் மீடியா அறை என்று அமைத்து பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து புகைப்பட கலைஞர்கள் மட்டும் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கும் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் மொத்தம் 67.55% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமாரும், அதிமுக சார்பில் கிருஷ்ணசாமியும், பாஜக சார்பில் ஜான் பாண்டியனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
கடையம் அருகே ராமநதி அணை அருகில் தலைமலை சாஸ்தா கோவில் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். இதனால் ராமநதி அணை மூடப்பட்டது. தற்போது மழை குறைந்தது. இதனையடுத்து சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி பாராளுமன்ற தொகுதி நாளை வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள், ஏழு டிஎஸ்பிக்கள், 33 ஆய்வாளர்கள் எஸ்ஐ ,எஸ்எஸ்ஐ உள்ளிட்ட போலீசார் 940 நபர்கள், சிஐஎஸ்எப் 63 நபர்கள், டிஎஸ்பி போலீசார் 90 நபர்கள், என 1135 பேர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (ஜூன் 4 ) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 14 மேஜைகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜை என 15 மேஜைகள் ள் உள்ளன. 6 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து ஒரு வேட்பாளருக்கு 90 முகவர்கள், தபால் வாக்கு எண்ணும் அறையில் 12 முகவர்கள் என ஒரு வேட்பாளருக்கு 102 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்க தேர்தல் ஆணையம் அர்ச்சனதாஸ் பட்நாயக் என்ற பார்வையாளரை நியமித்துள்ளது. இதுபோல் தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க பொது பார்வையாளராக டோபேஸ் வர்மா பொது பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 4ம் தேதி எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (FL1 FL2 FL3 FL3A, & FL11) ஆகிய மதுக் கூடங்கள் நாளை 4 ம் தேதியில் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா ,மகாராஷ்டிரா , மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன .மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைவால் விலை அதிகமாக ஏறி வருகிறது.
Sorry, no posts matched your criteria.