India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அந்த பகுதியில் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆலோசனையின் பெயரில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மற்றும் காவலர்களுக்கு உணவு தயார் செய்யும் கூடத்தை தென்காசி உணவு பாதுகாப்பு உட்கோட்ட அலுவலர் நாக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று யூஎஸ்பி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தற்போது 10.15 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர்- 23548 அதிமுக வேட்பாளர் 13450, நாதக 8540, பாஜக வேட்பாளர் 9958.
திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
தென்காசி, ராஜபாளையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
சங்கரன்கோவில்,
வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய 6 தொகுதிகளில் எண்ணப்பட்ட மூன்றாவது சுற்று வாக்கு நிலவரம் திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீகுமார் 23,548, அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி – 13, 450
பாரதிய ஜனதா 9958
நாம் தமிழர் 8540 வாக்குகள் பெற்றுள்ளன.
தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் வாக்கும் எண்ணும் பணி இன்று விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.
தென்காசி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியானது ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தென்காசி திமுக வேட்பாளரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் காலையிலிருந்து முன்னிலையில் இருந்து வருகிறார். தற்போது 20 ஆயிரத்து 108 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இருந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை, இரண்டாவது இடத்தில் புதிய தமிழகம் உள்ளது. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் காட்சியும், நான்காவது இடத்தில் பாஜக உள்ளன.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1126 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 618 வாக்குகள். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜான்பாண்டியன் 971வாக்குகள் பெற்றுள்ளன.
தென்காசி தனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தேர்தல் பார்வையாளர் அர்ச்சனாதாஸ் பட்நாயக் அவர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் Strong Room திறக்கப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை ஸ்ட்ராங் ரூம் திறப்பு உள்ளிட்ட எந்த தகவல்களையும் செய்தியாளர்கள் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மொத்தமுள்ள பத்திரிகையாளர்களில் ஏழு பேரை மட்டுமே முதல் கட்டமாக அழைத்துச் சென்றனர். அவர்களையும் பிஆர்ஓ அல்லது ஏபிஆர்ஓ உடன் வந்தால் தான் அனுமதிப்போம் என தடுத்து நிறுத்தியதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.