India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் – அமோக வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றுள்ள டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சம் வாக்குகளை தாண்டி பெற்றுள்ளார். இன்று மாலை 5.40 நிலவரப்படி திமுக வேட்பாளர் 394043, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 212589, பாஜக வேட்பாளர் 188547, நாதக வேட்பாளர் 118866 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளனர்.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய 6 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 7ஆவது முறையான இத்தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 370882, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 197506, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 175488, இசை.மதிவாணன் (நா.த.க) – 109993 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 173376 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவு பெறும் நிலையில் மாலை 5.20 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 378795, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 203271, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 179158, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 113994 வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் நாதக வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
தென்காசி தொகுதியில் பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஸ்ரீ ராணி குமார் மற்றும் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக இருந்த
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலனை இன்று ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பொறியாளர் அணி நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் பாராட்டி மாலை அணிவித்தனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 16 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 353392, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 188018, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 163229, இசை.மதிவாணன் (நா.த.க) – 102694 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 165374 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 3,73,991 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2,16,198 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதியானது.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய ஆறு முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இந்த ஆறு தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவினார். தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஏழாவது முறையான இந்த தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை தென்காசி வடக்கு மாவட்டம் திமுக செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஈஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.