India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடனா அணையின் உச்சநீர்மட்டம் 85 அடி, நீர் இருப்பு 60.70 அடி, நீர் வரத்து 6 கன அடி, 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 66.75 அடி, நீர்வரத்து 17 கன அடி, 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை உச்சநீர்மட்டம் 72 அடி, நீர் இருப்பு 54.14 அடி, நீர் வரத்து 5 கன அடி, 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
குற்றால அருவிகளுக்கு வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமி கடந்த 2014ல் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். பலமுறை இந்த மனு விசாரணைக்கு வந்ததுபோல் நேற்றும் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றால கோயிலுக்கு சொந்தமான கடைகளில் வாடகையை பாக்கியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொட்டல்புதூரை சேர்ந்த மைதீன் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனைக்காக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வாங்கி வந்த போது புளியரை வாகன சோதனையில் அவரிடமிருந்து ரூ.79000 மதிப்பிலான 1700 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து புளியரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிசயபுரம் பரம்பு மலை பகுதியில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்களில் பயிரிடப்படும் வேளாண் பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த கோரி நேற்று(செப்.2) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் கோரிக்கை மனு வழங்கினார்.
தென்காசி எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து செப்.11 அன்று பரமக்குடி செல்வோர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் தலைமை வகித்து அஞ்சலி செலுத்த செல்வோர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள், வாகனங்களுக்கான வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.
செங்கோட்டை நூலகத்தில் இறுதி வார இலவச குரூப் மாதிரி தேர்வு வருகிற செப்டம்பர் 4 மற்றும் 6,8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த இறுதி வார இலவச மாதிரி தேர்வில் முன்பதிவு தேவையில்லை. தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94869 84369 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என நூலகர் இன்று கேட்டுக்கொண்டார்.
ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன்(25), அவரது நண்பர் மாரிமுத்து(28) இருவரும் நேற்று(செப்.,1) தென்காசியில் நடைபெற்ற பூலித்தேவர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் – ராஜபாளையம் சாலையில், எதிரே வந்த வேன் மோதி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று(செப்.,2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் நாளை மறுநாள்(செப்.3) அன்று கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் இன்று தெரிவித்துள்ளார் .
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்டம்பர் 1) அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்திற்கு அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.