India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி 64 கிராம சேனைத்தலைவர் அபிவிருத்தி சங்கம் இளைஞரணி சார்பாக தென்காசி சௌந்தர்யா மஹாலில் வைத்து நாளை எட்டாம் தேதி காலை 10 மணியளவில் பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடக்க உள்ளது. மேலும் +2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கிப் படிப்பதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெற இருப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில்
யானை சின்னத்தில் போட்டியிட்ட மகேஷ்குமார் (எ) மகேஷ் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்து வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துவேல் ராஜா (39). விவசாயியான இவர் நேற்று வீட்டிலிருந்து கடைக்கு காமராஜர் சிலை அருகில் செல்லும் போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி சி ஸ்ரீகுமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண் பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சி பெற விரும்புபவர்கள்https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்றார்.
தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஐந்தாவது சுற்று கால்நடை நோய் தடுப்பூசி பணி வருகிற பத்தாம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். எனவே கால்நடை வளர்ப்பவர்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவரின் அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடையம் திருவள்ளுவர் கழகம் பெங்களூர் இலக்கிய பேரவை இணைந்து சிறப்பு கூட்டம் வருகிற ஜூன் 9ஆம் தேதி கடையம் கேஎஸ்எஸ் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்யாணி சிவகாமி நாதன் அறிமுக உரையாற்றுகிறார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் தமிழிசை ஞானி நல்லசிவம் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ளடக்கிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்று இரண்டாவது இடத்தைப் பெற்றார். நிலையில் இன்று காலை 11 மணியளவில் தென்காசியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல் சந்திப்பாக இன்று உள்ளது.
Sorry, no posts matched your criteria.