India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார் இன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தென்காசி மாவட்டம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் தென்காசி புறவழிச் சாலை, சுரண்டை நகர புறவழிச்சாலை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
தென்காசி மாவட்டத்தில் நாளை 9ம் தேதி 8 தாலுகாக்களில் 231தேர்வு மையங்களில்56 ஆயிரத்து 385 நபர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர். காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 8துணை ஆட்சியர்கள், 14 பறக்கும் படை, 60 நடமாடும் குழு, 231 ஆய்வு அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தென்காசி வட்டார அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி வட்டார பகுதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி மற்றும் காலை உணவுக்காக ஆயத்த பணி மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து பேசினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் இன்று (ஜூன் 8 ) காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குண்டாறு அணையில் இரண்டு மீட்டர் மலையும் தென்காசியில் ஒரு மீட்டர் மலையும் பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. மற்ற இடங்களில் மழை பதிவு இல்லை. இன்று மாவட்டத்தில் பல இடங்களில் மேகமூட்டமாக உள்ளது.
தென்காசி நகர மமக சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி நகர மக்களின் பயன்பாட்டுக்கான மலையான் தெருவில் இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுபித்து பல மாதங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க மறுக்கும் நகராட்சி நிர்வாகமே உடனே நடவடிக்கை எடுக்கும்படி மனிதநேய மக்கள் கட்சி
தென்காசி நகர கழகம் குறிப்பிட்டுள்ளனர்
தென்காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ராஜா எம்எல்ஏ, ஜெயபாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்புபில் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22 என நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான 29 விதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
தென்காசி- விருதுநகர் வழித்தடத்தில் 100கி.மீ/மணி ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் இனி 110கி.மீ/மணி ஆக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சென்னை ,மயிலாடுதுறை, மதுரை, வேளாங்கண்ணி, தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும்பயனடைவார்கள். மேலும் விருதுநகரில் இணைப்பு ரயிலை பிடிக்கும் பயணிகளும் பயன்பெறுவார்கள்.
தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியான வருவாய் தீர்ப்பாயம் வருகிற 11-ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ஆலங்குளம், செங்கோட்டை தென்காசி, சிவகிரி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் சங்கரன்கோவிலில் 11, 12, 13, 14 மற்றும் 18ம் தேதி என 5 நாட்களும், திருவேங்கடத்தில் 11, 12, 13 ,14 ஆகிய நான்கு நாட்களிலும் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.