India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வெளியப்பன் இன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் முற்றேன்; திமுக ஆட்சியில் தொடர் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன; அவரை இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வெளியப்பன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(செப்.,7) காலை நடைபயிற்சி சென்றபோது இக்கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பனவடலிசத்திரம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கடையநல்லூரைச் சேர்ந்த 3 மாணவிகள், சங்கரன்கோவில் மற்றும் பண்பொழியை சேர்ந்த 2 மாணவிகள் என மொத்தம் 5 மாணவிகள், நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இந்நிலையில் நேற்று அம்மாணவிகள் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பெற்றோர்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி பல்வேறு இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை தென்காசி செங்கோட்டை பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் எஸ்பி சீனிவாசன் முன்னிலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா நாளை தென்காசி வருகிறார். தொடர்ந்து, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் காலை 10 மணி அளவில் கலந்துகொண்டு, பின்னர் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட மைய குழு சார்பில் இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அறிக்கையில் தென்காசி வல்லன் குமாரன் விளை பகுதி மற்றும் தென்காசி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் செலுத்தும் காலம் முடிவுற்ற நிலையில், அரசு வட்டி தள்ளுபடி செய்தும் பணம் செலுத்தாதவர்கள் நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் அச்சகுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் வில்லிசை கலைஞர் மாதவி. இவர் தனது 14 வயதில் இருந்து தற்போது வரை 1056 வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை புரிந்துள்ளார். இவரை நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் நல்லாசிரியர் சுப்பா ராஜ் நேற்று(செப்.,6) நேரில் சந்தித்து ‘வில்லிசை ஏஞ்சல்’ விருது வழங்கினார். நம்ம ஊரு பொண்ணுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!
ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து, திருவனந்தபுரத்திற்கு தினை ஏற்றிக்கொண்டு நேற்று(செப்.,6) லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கொடி குறிச்சியை சேர்ந்த மாரி துரை(51) லாரியை ஓட்டி வந்தார். இந்நிலையில், லாரி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த அருளாச்சி விலக்கருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.
சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளி ஆசிரியர் சு.முருகனுக்கு தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் செம்மல் விருதினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார். அதனை முன்னிட்டு இன்று அவருக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.