Tenkasi

News September 11, 2024

தேய்ப்பு பெட்டிகள் பெற ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கும் ஏழை எளிய மிகப் பிற்படுத்தப்பட்டோர், திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 10, 2024

பழைய குற்றாலம் விவகாரம் ; கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

image

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று(செப்.09) விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி பழைய குற்றாலம் சுற்றுலா தளத்தை பாதுகாக்க வனத்துறைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பழைய குற்றால பகுதியில் உள்ள அருவிகளும் அதற்கு சென்று திரும்பும் பாதைகளும் பொதுப்பணித்துறை & உள்ளாட்சித் துறை நிர்வாகங்கள் மூலம் பராமரிப்பதை தமிழக அரசு உறுதி செய்து உத்தரவு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

News September 10, 2024

புகையிலை விற்றால் கடுமையான நடவடிக்கை – ஆட்சியர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(செப்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25,000 அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50,000 & ஒரு மாதம் வரை கடை மூடப்படும். 3வது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் & மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும் என்றார்.

News September 10, 2024

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் கட்டுப்பாடு அறிவிப்பு

image

பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலிருந்து பரமக்குடிக்கு 90 சொந்த வாகனங்களில் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்பூர், மாறாந்தை, கரட்டுமலை, நடுவப்பட்டி, மருக்கலாங்குளம், வேலாயுதபுரம் ஆகிய ஆறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News September 10, 2024

தென்காசி மாவட்ட மழை நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் ,குண்டாறு அணை பகுதியில் 6.2 மில்லி மீட்டர், கடனாநதி அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் செங்கோட்டை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News September 10, 2024

தொழிலாளர் நல வாரியம் சார்பில் நாளை முகாம்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி ஜும்மா (ஹனபி) பள்ளிவாசல் வளாகத்தில் இன்று(செப்.10) காலை 11 மணியளவில் மத்திய அரசு செயல்படுத்தும் தொழில் நல வாரியம் திட்டத்திற்கான முகாம் நடைபெறுகிறது. இதில் ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

News September 10, 2024

தென்காசியில் பாலியல் புகாரளிக்க ‘QR’code!

image

தென்காசியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க ‘அச்சம் தவிர்’ என்ற தனித்துவமான ‘QR’code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு அதனை இன்று(செப்.,9) மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தென்காசி MP ராணிஸ்ரீகுமார், தென்காசி MLA பழனி நாடார், வாசுதேவநல்லூர் MLA சதன் திருமலைக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

News September 10, 2024

தென்காசியில் ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி முகாம்

image

கடந்த கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத , தேர்வுக்கு வருகை புரியாத, தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிப்புகளில் சேராத மாணவர்களுக்காக ‘நான் முதல்வன்’ உயர்வுக்கு படி 2024 என்ற சிறப்பு முகாம் வருகிற செப்.,11ம் தேதி & 20ம் தேதிகளில் தென்காசி இசக்கி மஹாலில் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 9, 2024

தென்காசி ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு பள்ளிகளில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக்கொண்டார்.

News September 8, 2024

மாவட்ட பிரதிநிதி குடும்பத்திற்கு எடப்பாடி இரங்கல்

image

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வெளியப்பன் இன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் முற்றேன்; திமுக ஆட்சியில் தொடர் கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன; அவரை இழந்து வாழும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!