Tenkasi

News June 12, 2024

வருவாய் கிராம வழிகாட்டி பதிவேடு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

News June 12, 2024

சிலிண்டர் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஒருவர் பலி.

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மலைராமர் கோயில் பெட்ரோல் பங்க் அருகே நேற்று  சாலையோரம் நின்று கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது
ஆம்னி வேன் மோதி பயங்கர விபத்து. நண்பர்கள் குற்றாலத்தில் குளித்து விட்டு அதிகாலை திரும்பிய போது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருதம்புத்துாரை சேர்ந்த டிரைவர் உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 12, 2024

தென்காசி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

தென்காசி, வி.கே.புதூர் வட்டத்தில் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் மூலம் தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் வருகிற 19ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வி.கே.புதூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

News June 12, 2024

ஆட்சியர் வளாகத்தில் தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்படுமா?

image

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பிரச்சனைகள் வாரியாக மனு அளிக்க தனித்தனியாக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்டம் நெரிசல் தவிர்க்கப்படுகிறது. இதே போல் தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிரச்சனைகள் வாரியாக மனு அளிக்க தனி தனியாக கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News June 12, 2024

தென்காசியில் உறுதிமொழி ஏற்பு

image

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி உலக அளவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமிர்தலிங்கம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

News June 12, 2024

ரூ 650 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி இடம் தேர்வு

image

மதுரை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று கூறுகையில் தென்காசியில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கான 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணி நிறைவடையும் நிலை உள்ளது. இதற்காக ரூ 650 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் துவங்க உள்ளோம் என்றனர்.

News June 12, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விருதுநகர்,கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேகம், போக்குவரத்துக்கு நெரிசல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News June 12, 2024

தென்காசி அருகே கோவில் விழா 

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு நேரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் குத்துக்கல்வலசையில் செயல்பட்டு வருகிறது. இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி ,டிஆர்பி போன்ற தேர்வுகளுக்கு முயற்சி செய்பவர்கள் இங்கு கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன்பெறலாம் என்றார்.

News June 11, 2024

தென்காசி: மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட தகுதியான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!