India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ஆற்றுப்படுத்துனர்கள் (Counselling) பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள், ஜூன் 25ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மாதம் 9 முறைக்கு மிகாமல் மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து உட்பட ரூ.1000 வழங்கப்படும்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியில், ஊரணி ஒன்று நீண்ட நாள்களாக பராமரிப்பு இன்றி கிடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இந்தப் பணியை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், சீரமைப்பு பணி உடனடியாக முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட போக்குவரத்து போலீசாரின் துரிதமாக செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இலத்தூர் விலக்கில் நேற்று நடந்த சாலை விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 மற்றும் 7 வயதுடைய 2 குழந்தைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், கனரக லாரிகள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இதனால் பல்வேறு விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது எனவும், எனவே தமிழக அரசும், தென்காசி மாவட்ட ஆட்சியரும் கனிம வள கொள்ளையை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தென்காசியில் இன்று பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளை உடனடியாக தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
பின்னர் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லினிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.
தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கடந்த 2 மணி நேரமாக காத்திருந்தும் 11.15 மணி வரை அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கோடைசாரல் மழை காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்து வருகின்றது. கடந்த 2 தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாததினால் காரணமாக அனைத்து அருவிகளிலும் தற்பொழுது சற்றுநீர் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் காலை முதல் குற்றாலம் அருவியில் ஆண்கள் கூட்டம் காணப்படுகிறது. பெண்கள் கூட்டமும் குறைந்தது
தென்காசியில் மலம் கசடு சுத்திகரிப்பு ஆலைக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் வெளிப்பாடு வருகை மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார ஆதரவு திட்டத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவால் இந்திய மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் சார்பில் சிவராஜ் மற்றும் பிருத்வி மோகன் ஆகியோர் பயிற்சி கொடுத்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கோவிந்தபேரி, நாகம்பட்டி கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 4ம் தேதி பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 15 வருட பணி அனுபவம், முனைவர் பட்டம் மாநில தேசிய தகுதி தேர்வு ஏதாவது ஒன்றில் தகுதி பெற்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (ஜூன்.12) அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற எஸ்ஐக்கள் ஆறுமுகசாமி, சரசையன், ஜெயகுரு, இருளப்பன், சுப்பிரமணியன், எஸ்எஸ்ஐக்கள் சுலா, சாலமன் வேதமணி மற்றும் வாசுதேவநல்லூர் காவல் நிலைய தூய்மை பணியாளர் மாரியப்பன் ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.