India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவேங்கடம் அருகே சின்னக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ், மாரிமுத்து, சபரிவாசன் 3 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பெண் புகார் அளித்ததன்பேரில் போலீசார் 3 வாலிபர்களை இன்று (செப்.16) கைது செய்து நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் வடகரை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து ஆனது 23 கன அடி ஆகவும், குண்டார் அணைக்கு 47 கன அடியாகவும், கருப்பா நதி அணைக்கு 5 கன அடியாகவும், ராமநதி அணைக்கு 24 கன அடியாகவும், கடனாநதி அணைக்கு 18 கன அடியாகவும் நீர்வரத்து சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இன்று காலை தனியார் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த அரசு பேருந்து பள்ளி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பெரிய அளவிலான காயங்கள் யாருக்கும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி, கடையநல்லூர், வி கே புதூர் உள்ளிட்ட ஐடிஐ பயிற்சி மையங்களில் நடப்பு கல்வி ஆண்டுக்கு ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்கள் நலன் கருதி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தனர். விருப்பம் உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பாக்கியலட்சுமிக்கு மாமனாராக நடித்து வரும் S.T.P.ரோசரி தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவிலஞ்சி நாதர் கோயிலில் இன்று நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கிறார்.
சங்கரன்கோவில் கழுகுமலை ரோடு வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவர் டவுன் பகுதியில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் படுத்திருந்த மூதாட்டியை அங்கு போதையில் வந்து 3 பேர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். காயம் பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கோட்டை அருகில் உள்ள புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கீழப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். இந்த மக்களுக்காக தனியாக சுடுகாடு இல்லாத நிலை நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவைத் தொடர்ந்து இடுகாடு கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பிறகு இடுகாடு கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்கிழக்கில் தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டிருக்கும். 17ஆம் தேதி அன்று மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியான வழித்தடங்களை கண்டறிந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.