India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய்யா 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், ஜூன் மாதத்தில் வழங்கப்படும் 17ஆவது தவணையைப் பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். வங்கி கணக்கு தொடங்காத தென்காசி மாவட்ட விவசாயிகள், தபால் நிலையங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடங்கி அல்லது சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு, ராமநதி உள்ளிட்ட 5 நீர் தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்து வருகின்றன. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை, தற்போது 31 அடியாகவும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி 65 அடியாகவும் நீர் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (18.6.24) இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த திருமலாபுரம் கிராமத்தில், குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கே தொல்லியல் மேடு அமைந்துள்ளது. சமீபத்தில், திருமலாபுரம் மற்றும் உள்ளார் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில், தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இங்கு அகழாய்வு பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி கட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் ஜூன் 23 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியனின் சகோதரர் பொன் கருத்த பாண்டியன், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையறிந்த திமுக எம்.பி. கனிமொழி, உள்ளாறில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எம்.பி. தனுஸ்ரீ குமார், எம்எல்ஏ ராஜா உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்தனர்.
சங்கரன்கோவில் வந்த நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் எம்.பி. கனிமொழிக்கு, திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எம்.பி. கனிமொழி நேற்று சங்கரன்கோவில் வந்தாா். அப்போது அவருக்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் மகளிா் அணியினா் ஆரத்தி எடுத்து வரவேற்று ,மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கனரக லாரி ஓட்டும் கேரளா ஓட்டுநர்கள் மற்றும் தமிழக ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இதில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கிய நோட்டீசை மலையாள மொழியிலும்,தமிழ் மொழியிலும் அனைத்து டிரைவர்களுக்கும் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.