India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினரின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நேற்று நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்திற்கு இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக அச்சன்புதூர், இலத்தூர், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்த 25 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சங்கரன் கோவில் எம்.எல்.ஏ ராஜா தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர், “தென்காசி பத்திரப்பதிவு மாவட்டம் என மாற்ற வேண்டும், சங்கரன்கோவில் கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரிக்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும், சங்கரன்கோவில் பகுதியில் நவீன வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை கொண்டு வர வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் தற்போது பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம், தமிழத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாலை 4 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தினை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காவல்துறை, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு, டாஸ்மாக், வருவாய்துறை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கும் மற்றும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார். இதனால், கள்ளச்சாராயம் பற்றிய தகவல் தெரிந்தால், 98840 42100 (Help Line) என்ற உதவி எண்ணிற்கு உடனடியாக தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.