India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுய உதவிக் குழுக்கள், சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வருகிற 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராணி ஸ்ரீகுமார், தென்காசி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் நாளை (ஜூன் 26) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (3 மணி நேரம் கூடுதலாக) செயல்படும் என்றும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்காசி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த மழையால், குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறுமாறும், மனுவின் கீழ் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும், மனுவின் தன்மை குறித்து தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மது பாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்கான அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் குறைந்த வாடகையில் பெறலாம். டிராக்டர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500, அறுவடை இயந்திரம் (ஜெயின் டைப்) ஒரு மணிக்கு ரூ.1880 , டயர் டைப் ரூ.1160, புல்டோசர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1230 ஜேசிபி ரூ.890 என வாடகை விவரங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.