Tenkasi

News June 28, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஜூலை 2ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் கேட்டுக்கொண்டார்.

News June 28, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவியில் குளிக்க 3 நாள்கள் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தான் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

News June 28, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

2024ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறுகிறது. இதில், விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cadc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். திருமணமாகாத ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

News June 27, 2024

போட்டித் தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்டம் மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்பு வருகிற ஜூலை. 1ம் தேதி குத்துக்கல்வலசையில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

News June 27, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் கவனத்திற்கு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.

News June 27, 2024

குற்றால அருவியில் குளிக்க அனுமதி

image

குற்றால அருவியில் குளிக்க இன்று அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 4 நாள்களாக குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதான குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 5ஆவது நாளாக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News June 26, 2024

கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு தொழில்கள், வியாபாரம் செய்ய கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இதற்கு www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, விண்ணப்பித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

News June 26, 2024

சிறப்பு கடன் வழங்கும் முகாம்

image

தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என இணைப்பதிவாளர் நரசிம்மன் இன்று கூறியுள்ளார். அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) நில வள வங்கிகள் மூலம் பயிர் கடன், நகை கடன், சுய உதவி குழு கடன் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

தென்காசி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

error: Content is protected !!