India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் நடைபெற உள்ளது. எனவே, இப்போட்டியில் தென்காசி மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பழைய குற்றாலத்தில் இரவு 8 மணி வரை குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். விபத்தைத் தவிர்ப்பதாக, பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 7ஆம் தேதி முதல் ஆக.31ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆதார் மையங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாற்று திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன்பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 4ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் கலெக்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2327 காலிபணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் தென்காசி மாவட்டத்தினருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. மேலும், வரும் 13ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு, முழுமாதிரி தேர்வு நாளை ஜூலை 2, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகம் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சட்ட விரோதமாக விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நேற்று மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 79 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 611 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை முதல் 6ஆம் தேதி வரை ஒரு சில தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.
தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கனகம்மாள் நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு www.tnagrisnet.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். வேளாண் பட்டப்படிப்புக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றார்.
தென்காசியில் கனிமவள கொள்ளையை நிறுத்திட போராட்டம் நடத்தப்படும் என என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது பேசிய அவர், இத்தொகுதியில் 2லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளேன். 40 தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும் மாற்றம் வராது. மேலும், கனிமவளம் குறித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.