Tenkasi

News July 5, 2024

தென்காசி: மாநில பொதுச் செயலாளரான கவுன்சிலர்

image

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமாரை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் நேற்று(ஜூலை 4) அறிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News July 5, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு முகாம்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் தென்காசியில் முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

News July 4, 2024

6 மாதங்களில் 50 குற்றவாளிகள் மீது குண்டாஸ்

image

தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி 2024 ஜனவரி முதல் ஜூன் வரை கஞ்சா, கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்கு, கொள்ளை, வழிப்பறி, வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் படி 50 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News July 4, 2024

இலவச மண் எடுத்து செல்ல விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி கலெக்டர் கமல்கிஷோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இம்மாவட்டத்தில் பொதுப்பணி துறை (ம) ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (ம) வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல tnsevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

இலவச தொழில் பயிற்சி    

image

தென்காசி மாவட்டம் தனியார் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி வருகிற ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் உடன் இலவச தொழில் பயிற்சி வழங்கவுள்ளது.

News July 4, 2024

உதவித்தொகை: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2024-25 நிதியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்கிற இணையதளத்தில் மூலம் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News July 4, 2024

தென்காசி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், சகி -ஒன் ஸ்டாப் சென்டர் தொடங்கப்பட்டுள்ளத. அதில், சுழற்சி முறையில் பணிபுரிய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருகிற 20ஆம் தேதிக்குள் tenkasi.nic./forms/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2024-25 நிதியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்கிற இணையதளத்தில் மூலம் ஆக.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News July 4, 2024

ரயில்வே அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை

image

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், நேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “பொதுமக்களின் நலன் கருதி தென்காசி தொகுதியில் புதிய ரயில் மற்றும் ரயில் நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

News July 3, 2024

அரசு தொழில் பயிற்சியில் சேர விரும்புபவர்களின் கவனத்திற்கு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் அளிக்கலாம். இதற்கு வருகிற ஜூலை 15ஆம் தேதிக்குள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!